My Poetry in Tamil - கவிதை மனசு காரன்
நான் கவிதை மனசு காரன், இருட்டில் வெளிச்சம் தேடுபவன் , மனித சந்தையில் மனிதம் தேடுபவன் , வெற்றி வேட்டை மனிதர்கள் மத்தியில் தானம் செய்பவன். ஆடம்பரத்தில் எளிமையை தேடுபவன் , வெற்றிக்கு முன்னாள் மண்டியிட மாட்டோம். வெற்றி கணிதர்களின் நேர்த்தி எங்களுக்கு ரசனையற்றது , பூவின் யதார்தம் போல் வரும் தோல்வியின் ரசிகர்கள் நாங்கள் . நாங்கள் உணர்வகளின் களஞ்சியம் , சத்தமாக இருக்காது எங்கள் வெளிப்பாடு அழகானதாகவே இருக்கும் . கவிதை மனா காரர்களே கை கொடுங்கள் உங்களால் தான் மழை பெய்கிறது. இடுக்குகலின் வெளிச்சம் நாங்கள் , தினம் மன தோல் உரிப்பவர்கள், மான் தோற்றம் கொண்ட சிங்கங்கள் நாங்கள் , கவிதைமனசு எங்கள் முகவரி மதம் இனம் சாதி , கலைஞன் இனத்தின் இடது சாரிகள் ஐயா நாங்கள் !