ON Rarities of human life-Tamil poem - Rajesh's Chevrolet light கண் அழகி
இந்த கவிதைக்கு lead கொடுத்த அவ்வை பாட்டியிக்கு நன்றி ..
போட்டி மனப்பான்மை வளர்க்கும் மனைவிகளுக்கு இடையில், கார்ல் மார்க்ஸ் மனைவி போன்று தாயுள்ளம் கொண்ட மனைவி அரிது..
சுற்றி உள்ளவர்களை ஏமாற்றி வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் மத்தியில்,உண்மையான திறமை இருத்தல் அரிது..
ஜீன்ஸ்,தலைவிரி,கண்மை என கவனம் விரும்பும் Chevrolet light கண் அழகிகளுக்கு இடையில் மேக்கப் இல்லாத ஆத்மாவை உதயம் ஆக்கும் கருணை கண் அழகி அரிது..
பெருமைக்கென பிள்ளை பெற்று,வளர்க்கும் பெற்றோர்கள் மற்றும் காசுக்கும்,சேவைக்கும் வேலை செய்யும் ஆசிரியர்கள் மத்தியில், குழந்தைகளிடம் அலட்சியம் கட்டாதவர்கள் அரிது...
கங்கை போன்று சகலமும் இருக்கும் இணைய குப்பையில் மேயும் மேதாவிகளுக்கு இடையில்,உபயோக நேரம் இருத்தல் அரிது..
புது பணக்கார பந்தா மடிகணினி மென்பொருள் பேர்வழிகளில்,தொப்பை இல்லாத அறிவாளிகளை பார்ப்பது அரிது..
சுயநல சினிமாகாரர்கள்,பணக்காரர்கள்,அரசியல்வாதிகள்,பெரும் புள்ளிகள் போன்ற மகாத்மாவுக்கு இடையில் உண்மை பேசும் சுயசரிதம் அரிது..
கோட்பாடின் துணை கொண்டு வாழ்வை அணுக முயற்சிக்கும் எளிமையான வேத உபாசகர்கள் மத்தியில் கிரிக்கேட் விரும்பாதவர்கள் அரிது..
இரக்கம் கொண்ட தேரேசாக்கள் மத்தியில் தன்னை விட உயர்வாநவர்களை ஓற்று கொள்ளும் தெய்வ பெண்கள் அரிது...
நிறைய நண்பர்கள் கொண்ட சமூக கர்ணன்கல் மத்தியல்,கெட்ட பழக்கம் இல்லாதவர்கள் அரிது..
நித்தம் இறை அருள் நாடும் உங்கள் மதவாதிகள் மத்தியில் சுயநலம் இல்லாத மற்றும் மரணத்தை எதிர் கொள்ளும் வீரர்கள் இந்த கவிதையின் வாசகர்கள் போல் மிக அரிது...
Comments