ON Loving - Tamil poem தனிமை to காதல் by Rajesh

ஆசையின் ஆரம்பத்திர்க்கும் முடிவுக்கும் நடுவே

வாழ்க்கை இருக்கிறது,

ஆசைக்கு முன்னும் பின்னும் பெரிய வெற்றிடம். ..



மனிதனின் முதல் ஆசை தன்னை பல படுத்தி கொள்வது,அதை சுற்றி இருப்பவர்களை நம்ப வைப்பது,நம்ப வைக்க மனிதர்கள் தேவை ..

 ஆறு லட்சம் வருடங்களுக்கு முன்னால் முதல்  மனித பிறவி ஆன அந்த ஆப்பிரிக்க பெண்,
 இதற்காகவும் ,தனிமை சிறையை உடைக்கவும் தான் இனப் பெருக்கில் இடுபட்டாளோ..

தனிமையும்,காதலும்-இந்த ரெட்டை சுகமான சுமைகளும் நம் உணர்வில் கலந்த பெட்ரோல்,

அதனால் தான் அதன் கலப்படதன்மையும்,விலையும் அதிகமாகி செல் கிறது...

தன் உணர்வை,இருப்பை அங்கிகரிக்க,பிரதிபலிக்க(நிராகரிக்க?! ) ஒரு ஜீவன் தேவை படுகிறது,

மனிதனக்கு மட்டும் ஏன் இந்த புகழ் மயக்கம்..?தன்னை தானே அறிந்தால் ,மற்றவர் புகழை

எதிர்ப்பார்க்க மாட்டான்.

ஒரு வேளை தன்னை தானே நம்பாததால் இந்த முயற்சி?



தனிமை என்ற சொல்லே சுய பட்சதாபம்,

தனித்து இருப்பதே சரியான வார்த்தை.

தனித்து இருத்தல் நெருப்பை போன்றது தன்னை தானே உள்வாங்கி கொள்கிறான்..

அந்த நெருப்பில் தன் கர்வத்தை அழிக்கிறான்.

பெண்கள் ஆண் கர்வத்தை கண்டு பிடிக்கும் உக்கிர உணர்ச்சி எந்திரம்,95 சதவிகிதம் அவர்கள் எபபோழ்துமே சரி..

அவர்கள் மட்டுமே இதை செய்து ஆண்களை ஞானம் பெற வைக்க முடியும்,

பெண்களை துறந்து ஓடும் துறவிகள்,இந்த முக்கிய பாடத்தை பெறவில்லை..

நாம் கர்வத்தில் இருக்கும் போழ்து மற்றவர்களை கவனிக்க மறக்கிறோம்.

கர்வத்தை குறைத்து பெண்ணை ஜெயித்து

தொல்காப்பியத்தில் சொன்னது போல் ஆணில் இருக்கும் பெண்மையும், பெண்ணில் இருக்கும் ஆண்மையும் சண்டை இட்டு கொள்ளாது இருந்து ,வாழ்க்கை நீளட்டும்.........

Comments

Popular posts from this blog

#home Malayalam movie review

ON Self Knowledge Philosopher Jiddu Krishnamurti - Why JK repeats?(On my spiritual guru

ON Tamil Writer Balakumaran - The man who knew too much on spirituality