ON Scientists LOVE - விஞ்ஞaனி காதல் -கவிதை முயற்சி by Rajesh
டோபமின் சங்கீதம் பாடிய அந்த திருநாள்,காதல் ராகமே ஆதாரம்.
தோல்வி பயம் ரத்தத்தை தாக்கி வேகமாக்கியது அந்த தேவதை தரிசினத்தில்.
எனதாக்கி கொள்வதில் அவசரம் காட்டிய நான்,என் ரசம் சரமாகி நான் என் வசம் இல்லாமல் ஆனேன்.
அவள் பார்வையில், வாழ் நாள் வாழ வேண்டிய வாழ்கையை வாழ்ந்து முடித்தேன்.
இந்த காதலுக்காக நான் ராவணனாக,வாலியாக,துச்சதனாக மாற தயாராக வில்லை,
மாறாக வாசுதேவன் கிருஷ்ணனை சுமந்தது போல் எதிர்ப்பு இடையே என் காதலை சுமந்து வந்தேன்
என் மன கூடையில்.
பிரியாத வரம் கேட்டு ஏங்கினேன்,
பகுத்து அறியும் விண்வெளி விஞ்ஞானி,இன்று மனவெளி மெய் ஞானி மாறினேன்
எத்துனுயோ தகவல் சுமந்த என் அறிவு ,இன்று காதல் சுமையால் பாரம் மற்றும் அபாரம் ஆகியது.
வெளியை படித்திருந்தாலும் இன்று தான் நான் அதில் ரெக்கை முளைத்து பறந்தேன்,என் மன கூண்டில்..
காலம் என் காதலை கிரகணம் ஆக்கியது.
இதோ இன்னொரு கல்லறை என் மன அறையில்.அதன் மீது எழுதி இருந்தது "தோன்றவும் இல்லை மறையவும் இல்லை"
என் தனிமை தவத்தை கலைத்த மேனகை,அவளும் என் மீது காதல் வச பட்டிருப்பாலோ?
திரும்பவும் தனிமை தவத்தில் ஆழ்ந்தேன்,வாழ்க்கை சாலையில் வேகமாக நடந்த வாரு..
அவளை எனதாக்கி கொள்ளும் அழுத்தம் துறந்த பின் இன்னும் வேகமாக நடக்க முடிந்தது...
....................
"பிரேக் வரிங்களா.. ",என்று கேட்டாள் கண்கள் அளவில் மட்டுமே அறிமுகம் ஆன ஒரு புது மனிதர்,
"ஏன் கூடாது" என்று சொல்லி அவளுடன் நடக்க துவங்கினேன்.
ஒரு புதிய நட்பின் தொடர்ச்சி...
Comments