ON Beggars - Tamil writer சுஜாதாவின் கவிதை


கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்,கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்,பாயின்றிப் படுத்திருப்பாய், ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்,பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்,சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்,காஜா அடிப்பாய், கட்டடத்தில் கல் உடைப்பாய்,கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய், மேட்டினியில் இடிபடுவாய்,மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்,கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வார்கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்,திரைப்படங்கள் எடுப்போம், திண்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றிவரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்துவருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்..
குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திருகூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்
சில்லறையாய் இல்லை போய்விட்டு அப்புறம் வா !

Comments

Popular posts from this blog

Pulp Fiction - Fan Theory

ON Tamil Writer Sujatha - எழுத்தாளர் சுஜாதா

#home Malayalam movie review