My Poetry in Tamil - கவிதை மனசு காரன்
நான் கவிதை மனசு காரன்,
இருட்டில் வெளிச்சம் தேடுபவன் ,
மனித சந்தையில் மனிதம் தேடுபவன் ,
வெற்றி வேட்டை மனிதர்கள் மத்தியில் தானம் செய்பவன்.
ஆடம்பரத்தில் எளிமையை தேடுபவன் ,
வெற்றிக்கு முன்னாள் மண்டியிட மாட்டோம்.
வெற்றி கணிதர்களின் நேர்த்தி எங்களுக்கு ரசனையற்றது ,
பூவின் யதார்தம் போல் வரும் தோல்வியின் ரசிகர்கள் நாங்கள் .
நாங்கள் உணர்வகளின் களஞ்சியம் ,
சத்தமாக இருக்காது எங்கள் வெளிப்பாடு அழகானதாகவே இருக்கும் .
கவிதை மனா காரர்களே கை கொடுங்கள்
உங்களால் தான் மழை பெய்கிறது.
இடுக்குகலின் வெளிச்சம் நாங்கள் ,
தினம் மன தோல் உரிப்பவர்கள்,
மான் தோற்றம் கொண்ட சிங்கங்கள் நாங்கள் ,
கவிதைமனசு எங்கள் முகவரி மதம் இனம் சாதி ,
கலைஞன் இனத்தின் இடது சாரிகள் ஐயா நாங்கள் !
Comments