ON Ironing man - Tamil poem கடிகார மூளை by Rajesh
மரத்தடி கிளிஜோசிய கரனை போல் அதிர்ஷ்டத்தை நம்பாமல் ,
உழைப்பை நம்பும் இஸ்திரிக்காரன் நான்.
என் உழைப்பை பற்றிய கர்வத்திற்கு களங்கம்
ஏற்படுமாறு இப்போது ஒரு a/c
கார் காரர் என் மர அலுவலகம் முன் வண்டியை நிறுத்தி, துணியை முகத்தில் எரிந்து என்
உழைப்பை குறை கூறினார் அந்த அரைகுறை
.
அவர் a/c கார் என்
மரக்காற்றை மாசு படுத்தியது,காற்றை அடிமையாக்கும் அவர் எங்கே,இயற்கையோடு ஒட்டி வாழும்
நான் எங்கே?,
என் உழைப்பை பற்றி அவரிடம் நான் சொல்ல
நினைத்தது இதோ,உள்ளங்கால் முதல் உச்சன்தலை வரை...
உள்ளங்கால்
என் ரத்த அருவியின் முடிவான உள்ளங்கால் பரத
கலைஞரின் பரிமாணத்திற்கு நிகரானது.
கால்
என் கால்கள் கால் பந்து வீரர் Pele-வுக்கு நிகரான வலிமையுற்றது.
தொடை
என் தொடை துரியோதனனை போல் வலிமையற்றது அல்ல
மாறாக,பீமனை போன்று உக்கிரமானது.
இடுப்பு
சர்கஸ் காரியை போல் மெலிதானது.
வயிறு
துணியின் சுருக்கத்தை அகற்றும் என் வயிற்றில்
சுருக்கங்கள் அதிகம், உங்கள் சூர்யா போன்று 6 pack.
முதுகு
நேர் கோட்டிற்கு எடுத்து கட்டு ,தியானம் செய்பவரின் கம்பீரம் போன்றது
கழுத்து
செல்போன் பெண்களை போல் குனிந்த தலை நிமிராதது.
கண்கள்
என் கண்கள் ஒலிம்பிக் தங்ககாரர் அபினவ் பிண்டர
போன்று கவன குவிப்பு சாதனம்.
கைகள்
என் கைகள் அறுவை சிகிச்சை செய்யும் டாக்டருக்கு
ஒப்பான நுட்பம் உடையது.
மூளை
என் மூளை உங்கள் அன்றாட வேலைசெய்பவர்கள் போன்று குறுகிய,எந்திரத்தனமான, கடிகார மூளை அன்று.
மாறாக நெருப்பை போன்று திறம் படைத்தது....
Comments