ON Clouds - நான் வானம் பேசுகிறேன்.....(கவிதை கிறுக்கல்) by Rajesh
நான் வானம் பேசுகிறேன்.....
பிரபஞ்ச ரகசியத்தை மறைக்கும் திரை நான்,
கீழே திரை விலகினால் நக்க்ஷதரங்களின் காட்சி,
இங்கோ சூரியனின் ஆட்சி.
வானூர்தியின் சாலை நான்,
அது தூவும் மாசுகளினால் நான் நிறம் மாறுவதில்லை,
மனிதர்களை போல்..
இருப்பினும்,இவ்வளவு காலமாக ஒழித்து வைத்திருந்த,
பிரபஞ்ச ரகசியத்தை உங்கள் ராக்கெட் கிழித்து எரிந்தது..
------ராஜ் ஈஷ்,கோடைக்கானல்,23-10-2010
Comments