ON Talking - பேச்சு-கவிதை முயற்சி by Rajesh
அன்று மௌன விரதம் இருந்தேன்,அந்த மௌனம் என் பேச்சு
சரித்தரித்தை பேசி காட்டியது,
அழுகை வராத சோகம் போல் மிகவும் அழுத்தமானது அந்த மௌனம்,
மௌன மேடையில் பேச்சு நாடகங்கள் அரங்கேறியது…
அந்த மௌனம் பேசிய
பேச்சுக்கள்,இதோ....
டெண்டுல்கர் அடித்த முதல் ஜீரோ போல்,ஐன்ஸ்டீன்,சர்ச்சிலின்
சிறு வயது பேச்சு திணறல் போல், என் சிறு வயது முதல் பேச்சு முயற்சி பலதும் தோல்வியே,
ஆனால் பேச ஆரம்பித்த பிறகு சில ஜீரோ, மனைவியிடம்,பல நேர்காணல்களில் ,
பல சதங்களும் அடித்திருகிறேன்,தோற்ற
பந்தயத்தில் உட்பட.
பேச்சு தான் மனிதனின் பிள்ளையார் சுழி,தலை சுழி எல்லாமே,அதனால் தான் சிறுவயது கிருஷ்ணனின் வாயில் உலகும் தெரிந்ததோ? ..
மனிதனின் எல்லா சண்டைக்கு ஆதி மூலம் பேச்சே..
மனித அரசியலின் பிறப்பு பேச்சு தான்,
மனிதர்கள் பேசும் பேரத்திற்கு சுயநல
வியாபாரி சொன்ன பதில்கள்
அத்தனையும் ,கறுப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்...
பேச்சில் பாசாங்கு இருந்தால் எல்லோரும் நம்மை விரும்பவார்கள் , ஆனால் உண்மை இருந்தால் தான் நம்மை நாமே விரும்ப முடியம்.
பேசினால் நமக்குள் அமைதி,சுற்றி இருப்பவர்களுக்கோ
அமைதியின்மை..
பேச்சு மனிதனின் முதல் தொடர்பு சாதனம்,மனதின் தொடல் சாதனம்..
நான் கேட்ட பல தஞ்சாவூர் கெட்ட வார்த்தைகள் ,பேசுபவரின்
மனதை தூய்மை ஆக்கினாலும் சுற்றி உள்ளவர்களின் மனதை குப்பை
ஆக்கிறது..
பேச்சை விட மௌனத்தில் கிடைத்த அர்த்தங்கள்
அதிகமாகவும்,ஆழமாகவும் உள்ளது வினோதமே..
சார்லி சாப்ளினின் மௌன படத்தில் வரும்
அர்த்தம் ஷேக்ஸ்பியர் நாடங்களில் கிட்டுவதில்லை,
காதலில் பேச்சு சாகசங்கள் தொடாத உயரத்தை,மௌனங்கள் தொட்டு விடும்,
தொழில்,படிப்பு,சினிமா,காதல்,கல்யாணம்,வசதி,ஊர் சுற்றுவதுc`c
எல்லாம் அலுக்கிறது,ஆனால் பேச்சு மட்டும் மனிதனுக்கு அலுப்பதில்லை.
ஏன்?,பேச்சு மனிதனின் அகம்பாவத்தை திருப்தி படுத்தும் ஊடகமாய் இருப்பதாலோ
பேச்சு நாம் உடுத்திய தனிமையை அவிழ்க்கும்
முயற்சியோ,தூங்கியே மனிதன் 20 வருடம் கழிக்கிறான்,11 வருடம் தொலைக்காட்சி பெட்டி முன்னாள் கழிக்கிறோம் ,பேச்சில் எவ்வளவு கழிக்கிறான்??,
ஆகையால் இந்த அர்த்தமற்ற,உண்மையற்ற,பாசங்குள்ள பேச்சுக்களை
மன்னிக்க மௌனத்திடம் மனித குலம் மண்டியிட வேண்டும்!!!
Comments