ON Talking - பேச்சு-கவிதை முயற்சி by Rajesh
அன்று மௌன விரதம் இருந்தேன் , அந்த மௌனம் என் பேச்சு சரித்தரித்தை பேசி காட்டியது , அழுகை வராத சோகம் போல் மிகவும் அழுத்தமானது அந்த மௌனம் , மௌன மேடையில் பேச்சு நாடகங்கள் அரங்கேறியது … அந்த மௌனம் பேசிய பேச்சுக்கள் , இதோ.... டெண்டுல்கர் அடித்த முதல் ஜீரோ போல் , ஐன்ஸ்டீன் , சர்ச்சிலின் சிறு வயது பேச்சு திணறல் போல் , என் சிறு வயது முதல் பேச்சு முயற்சி பலதும் தோல்வியே , ஆனால் பேச ஆரம்பித்த பிறகு சில ஜீரோ , மனைவியிடம் , பல நேர்காணல்களில் , பல சதங்களும் அடித்திருகிறேன் , தோற்ற பந்தயத்தில் உட்பட . பேச்சு தான் மனிதனின் பிள்ளையார் சுழி , தலை சுழி எல்லாமே,அதனால் தான் சிறுவயது கிருஷ்ணனின் வாயில் உலகும் தெரிந்ததோ? .. மனிதனின் எல்லா சண்டைக்கு ஆதி மூலம் பேச்சே.. மனித அரசியலின் பிறப்பு பேச்சு தான் , மனிதர்கள் பேசும் பேரத்திற்கு சுயநல வியாபாரி சொன்ன பதில்கள் அத்தனையும் , கறுப்பு உதடுகளின் வெளிச்ச உளறல்கள்... பேச்சில் பாசாங...