ON Roadside observing - சாலை பயணத்தில் நான் சந்தித்த சில வேடிக்கைகள் tamil poetry by Rajesh
சமூகம் என்பது கடல், அதில் நான் எடுத்த தகவல் குடம் அளவு. இந்த கவிதை பிறந்த இடம் சாலை. சாலையை பூக்களால் அலங்கரித்து இருக்கிறது ஒரு சடலம், குறவன்,குறத்தி சாக்கடை அருகே, கல்லூரி பெண் செல்போன் sms வுடன், cyclinder வண்டி இழுக்கும் குடும்பஸ்தன். இந்த சமூக கடலின் ஆழம், மணல் அளவு,நஷத்திரம் அளவு,உடல் செல் அளவு, இல்லை,இல்லை..இங்கு இருக்கும் ஜாதி அளவு. சமூகத்தின் இத்தனை பரிமாணங்களையும் உள்ளடக்கி இருக்கும் நானே எந்த சமூகம், இந்த சமூகமே நான். ==ராஜ் ஈஷ்,March,2010