ON Tamil Novels - Tamil writer Murugan and Pa.Raghavan list of best tamil novels




The letter i wrote to Tamil writer Jeyamohan
தேர்வுக்கான தகுதி : கதையமைப்பு,சொன்ன விதம், திவச மந்திரம் போல வசவச என்று இல்லாமல் படிக்க சுவாரசியமான நடை.
1) கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் அய்யர்
2) தலையணை மந்திரோபதேசம் – பண்டித நடேச சாஸ்திரி
3) சந்திரிகையின் கதை, சின்னச் சங்கரன் கதை (முற்றுப் பெறாவிட்டாலும்) – பாரதியார்
4) பொய்த் தேவு – க.நா.சு
5) வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
6) அலை ஓசை – கல்கி
7) மோகமுள், அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
8) ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள், பாரீஸுக்குப் போ – ஜெயகாந்தன்
9) கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
10) பள்ளிகொண்ட புரம் – நீல பத்மநாபன்
11) வண்ணக் கனவுகள் – விட்டல்ராவ்
12) புலிநகக் கொன்றை, கலங்கிய நதி – பி.ஏ.கிருஷ்ணன்
13) கருக்கு – பாமா
14) எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா
15) சாயத்திரை – சுப்ரபாரதி மணியன்
16) பாய்மரக் கப்பல் – பாவண்ணன்
17) ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் – தமிழவன்
18) ரத்தம் ஒரே நிறம், கரையெல்லாம் செண்பகப்பூ, மீண்டும் ஜீனோ – சுஜாதா
19) அடிமையின் காதல் – ரா.கி.ரங்கராஜன்
20) 6174 – சுதாகர்
21) புயலில் ஓர் தோணி – ப.சிங்காரம்
22) தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி
23) பாலங்கள் – சிவசங்கரி
24) வாசவேச்வரம் – கிருத்திகா
25) நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
26) வேர்ப்பற்று, தந்திர பூமி – இந்திரா பார்த்தசாரதி
27) காகித மலர்கள் – ஆதவன்
28) பதினெட்டாவது அட்சக் கோடு,மானசரோவர் – அசோகமித்திரன்
29) ஒரு புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
30) நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்
31) திருவரங்கன் உலா – ஸ்ரீவேணுகோபாலன்
32) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
33) வாடாமல்லி – சு.சமுத்திரம்
34) அசடு – காஸ்யபன்
35) மெல்லக் கனவாய் பழங்கதையாய் – ப.விசாலம்
26) சாய்வு நாற்காலி – தோப்பில் முகம்மது மீரான்
27) கடல்புரத்தில் – வண்ணநிலவன்
28) புத்தன்வீடு – ஹெப்சிபா தாசன்
29) இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
30) இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா
=========================================================================


எழுத்தாளர் Pa Raghavan-வின்சிறந்த 100 நூல்கள்பட்டியல் : (2006-ம் ஆண்டு தொகுத்தது) (Source and Thanks to மாயவரத்தான் கி ரமேஷ்குமார் FB entry)
1.
பெரியாழ்வார் பாசுரங்கள்எளிமைக்காகப் பிடித்தது.

2.
என் சரித்திரம்.வே. சாமிநாத ஐயர்வேறு யார் எழுதினாலும் கண்டிப்பாக போரடிக்கக்கூடிய விஷயத்தை சுவாரசியம் குறையாமல் சொன்னதற்காக.

3.
பைபிளின் பழையஏற்பாடுமொழி அழகுக்காக.

4.
புத்தரும் அவர் தம்மமும்அம்பேத்கர்பவுத்தம் பற்றிய விரிவானஅதேசமயம் மிக எளிய அறிமுகம் கிடைப்பதால்.

5.
பாஞ்சாலி சபதம்பாரதிபாரதக் கதைக்கு அப்பால் கவிஞன் சொல்லும் தேசியக் கதைக்காக.

6.
அம்மா வந்தாள்ஜானகிராமன்காரணமே கிடையாது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை படிப்பேன்.

7.
ஜேஜே: சில குறிப்புகள்சுந்தர ராமசாமிபிரமிப்பூட்டும் பாத்திரவார்ப்புக்காகவும் அசாத்தியமான நகைச்சுவை உணர்வுக்காகவும்.

8.
சிந்தாநதிலாசராஇதற்கும் காரணம் கிடையாது.

9.
கல்லுக்குள் ஈரம்.சு.நல்லபெருமாள்பிரசார வாசனை இல்லாத பிரசார நாவல் என்பதனால்.

10.
அரசூர்வம்சம்இரா. முருகன்கட்டுமான நேர்த்திக்காக.

11.
விஷ்ணுபுரம்ஜெயமோகன்அந்தரத்தில் ஓர் உலகைச் சமைத்து, அதைப் புவியில் பொருத்திவைக்கச் செய்த அசுர முயற்சிக்காக.

12.
கார்ல்மார்க்ஸ்வெ. சாமிநாத சர்மாஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கு உதாரணம்.

13.
ரப்பர்ஜெயமோகன்நேர்த்தியான கட்டுமானத்துக்காக.

14.
மதினிமார்கள் கதைகோணங்கிகதை சொல்லுகிற கலையில் சில புதிய உயரங்களைச் சுட்டிக்காட்டுவதனால்.

15.
ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்குட்டிக்கதைகளுக்காக.

16.
ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம்ஜெயகாந்தன்நிறைவான வாசிப்பு அனுபவத்தை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் தருவதால்.

17.
. மாதவன் கதைகள் முழுத்தொகுதிபெரும்பாலும் சிறந்த கதைகளாக இருப்பதால்.

18.
வண்ணதாசன் கதைகள் முழுத்தொகுதிஎல்லாமே நல்ல கதைகளாக இருப்பதால்.

19.
வண்ணநிலவன் கதைகள் முழுத்தொகுதிஎல்லாமே மனத்தைத் தொடுவதால்.

20.
புதுமைப்பித்தன் கதைகள் முழுத்தொகுதிமொழிநடை சிறப்புக்காக.

21.
பிச்சமூர்த்தி சிறுகதைகள் (பாகம்1 & 2) – பயில்வதற்கு நிறைய இருப்பதனால்.

22.
வேதபுரத்து வியாபாரிகள்இந்திரா பார்த்தசாரதிதமிழில் எழுதப்பட்ட நேர்த்தியான ஒரே பொலிடிகல் ஸட்டயர் என்பதனால்.

23.
சுந்தரராமசாமி சிறுகதைகள் முழுத்தொகுதிபெரும்பாலும் நல்ல கதைகள் என்பதால்.

24.
தாவரங்களின் உரையாடல்எஸ்.ராமகிருஷ்ணன்நவீன எழுத்து மொழி சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு.

25.
நெடுங்குருதிஎஸ். ராமகிருஷ்ணன்ஒரு கிராமத்தின் தோற்றத்தையும் தோற்றத்துக்கு அப்பாலிருக்கும் ஆன்மாவையும் மிக அநாயாசமாகக் காட்சிப்படுத்தியிருப்பதற்காக.

26.
வேடந்தாங்கல்.வே. சிவகுமார்ஓர் இளைஞனின் கதை மூலம் ஒட்டுமொத்த இளைஞர் சமூகத்தின் மனோபாவத்தைக் காட்சிப்படுத்தும் நேர்த்திக்காக.

27.
பயணியின் சங்கீதம்சுகுமாரன்கவிதைகளாகவே இருக்கும் கவிதைகள் உள்ள தொகுதி.

28.
குள்ளச்சித்தன் சரித்திரம்யுவன் சந்திரசேகரன்மாய யதார்த்தக் கதை சொல்லும் வடிவின் அசுரப்பாய்ச்சல் நிகழ்ந்திருப்பதற்காக.

29.
அரவிந்தரின் சுயசரிதம்காரணமில்லை. சிறப்பான நூல்.

30.
கரீபியன் கடலும் கயானா தீவுகளும்.கே.செட்டியார்பயண நூல் எப்படி எழுதவேண்டும் என்பதற்கு உதாரணம்.

31.
மானுடம் வெல்லும்பிரபஞ்சன்நேர்த்தியாக எழுதப்பட்ட நாவல்.

32. God of small things –
அருந்ததிராய்சுகமான மொழிக்காக.

33. Midnight’s Children –
சல்மான் ருஷ்டிஅதே சுகமான மொழிக்காக.

34. Moor’s last sigh –
சல்மான் ருஷ்டிபால்தாக்கரே பற்றிய அழகான பதிவுகளுக்காக.

35. Interpreter of Maladies –
ஜும்பா லாஹ்ரிஅருமையான சிறுகதைகள்.

36.
நிலா நிழல்சுஜாதாநேர்த்தியான நெடுங்கதை.

37.
பொன்னியின் செல்வன்குழப்பமே வராத கட்டமைப்புக்காக.

38. 18
வது அட்சக்கோடுஅசோகமித்திரன்மிகச்சிறந்த தமிழ்நாவல்

39.
ஒற்றன்கட்டுமான நேர்த்திக்காக.

40.
இன்றுஅசோகமித்திரன்நவீன எழுத்துமுறை கையாளப்பட்ட முன்னோடித் தமிழ்நாவல்

41.
காலமும் ஐந்து குழந்தைகளும்அசோகமித்திரன்உலகத்தரத்தில் பல சிறுகதைகள் உள்ள தொகுதி

42.
வாடிவாசல்சி.சு.செல்லப்பாபிரமிப்பூட்டும் படப்பிடிப்புக்காக.

43.
குட்டியாப்பாநாகூர் ரூமிஒரே சமயத்தில் சிரிக்கவும் அழவும் வைக்கக்கூடிய செய்நேர்த்திக்காக.

44.
அவன் ஆனதுசா. கந்தசாமிசிறப்பான நாவல்.

45.
பசித்த மானுடம்கரிச்சான்குஞ்சுகொஞ்சம் வளவளா. ஆனாலும் நல்லநாவல்.

46.
காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்ஆர். வெங்கடேஷ்மார்குவேஸ் குறித்த சிறப்பான, முழுமையானரொம்ப முக்கியம், எளிமையான அறிமுகத்தைத் தமிழில் தந்த முதல் நூல்.

47.
கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுதிசிறப்பான வாசிப்பனுபவம் தரும் நூல்.

48.
புத்தம்வீடுஹெப்சிபா ஜேசுதாசன்நேர்த்தியான குறுநாவல்

49.
ஒரு யோகியின் சுயசரிதம்பரமஹம்ச யோகானந்தர்மாய யதார்த்தக் கூறுகள் மிக்க, சுவாரசியமான வாழ்க்கை வரலாறு.

50.
எடிட்டர் எஸ்..பிரா.கி.ரங்கராஜன், ஜரா. சுந்தரேசன், புனிதன்சம்பவங்களாலேயே ஒரு மனிதனின் முழு ஆளுமையையும் சித்திரிக்கும் விதத்துக்காக.

51.
..சி நூல் திரட்டுகாரணமே வேண்டாம். ஆவணத்தன்மை பொருந்திய நூல்.

52.
நல்ல நிலம்பாவை சந்திரன்நேர்த்தியாக எழுதப்பட்ட நல்ல நாவல்.

53.
நாச்சியார் திருமொழிஇதைக்காட்டிலும் சிறந்த காதல் பாடல்கள் இன்னும் உதிக்கவில்லை என்பதால்.

54.
இலங்கைப் போராட்டத்தில் எனது சாட்சியம்சி.புஸ்பராஜாபுனைவு நுழையாத சரித்திரம் என்பதனால்.

55.
வனவாசம்கண்ணதாசன்வாழ்க்கை வரலாறைக்கூட நாவல் போன்ற சுவாரசியமுடன் சொன்னதால்.

56.
நுண்வெளிக் கிரணங்கள்சு. வேணுகோபால்சிறப்பாக எழுதப்பட்ட நல்ல நாவல் என்பதால்.

57.
திலகரின் கீதைப் பேருரைகள்

58.
சின்மயாநந்தரின் கீதைப் பேருரைகள்பொருத்தமான குட்டிக்கதை உதாரணங்களுக்காக.

59.
பாகிஸ்தான் அல்லது இந்தியப்பிரிவினைஅம்பேத்கர்தீர்க்கதரிசனங்களுக்காக.

60.
காமராஜரை சந்தித்தேன்சோநேர்த்தியான சம்பவச் சேர்க்கைகளுக்காக.

61. Daughter of East –
பேனசிர் புட்டோதுணிச்சல் மிக்க அரசியல் கருத்துகளுக்காக.

62. All the president’s men – Bob Woodward –
திரைப்படம் போன்ற படப்பிடிப்புக்காக.

63.
அர்த்தசாஸ்திரம்சாணக்கியர்தீர்க்கதரிசனங்களுக்காகவும் அரசு இயந்திரம் சார்ந்த வெளிப்படையான விமரிசனங்களுக்காகவும்.

64.
மாலன் சிறுகதைகள் முழுத்தொகுப்புமுற்றிலும் இளைஞர்களை நோக்கியே பேசுகிற படைப்புகள் என்பதனால்.

65.
பிரும்ம ரகசியம்.சு.நல்லபெருமாள்இந்திய தத்துவங்களில் உள்ள சிடுக்குகளை எளிய தமிழில் அறிமுகப்படுத்தி, விளக்குவதால்.

66. Train to Pakistan –
குஷ்வந்த்சிங்எளிய ஆங்கிலத்துக்காக.

67.
திருக்குறள்அவ்வப்போது உதாரணம் காட்டி விளக்க உதவுவதால்.

68.
மதிலுகள்வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.) – இதைக்காட்டிலும் சிறந்த காதல் கதை இன்னும் எழுதப்படவில்லை என்பதனால்.

69.
எட்டுத்திக்கும் மதயானைநாஞ்சில் நாடன்மிக நேர்த்தியான நாவல் என்பதால்.

70.
பொழுதுக்கால் மின்னல்கா.சு.வேலாயுதன்கோவை மண்ணின் வாசனைக்காக.

71.
கணையாழியின் கடைசிப் பக்கங்கள்சுஜாதாசுவாரசியத்துக்காக.

72. Courts and Judgements –
அருண்ஷோரிஅருமையான அலசல்தன்மைக்காக.

73. If I am assasinated –
ஜுல்பிகர் அலி புட்டோபிரமிப்பூட்டும் ஆங்கிலத்துக்காகவும் ரசிக்கத்தக்க நாடகத்தன்மைக்காகவும்

74.
பள்ளிகொண்டபுரம்நீல. பத்மநாபன்ஒரு நகரைக் கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட சிறந்த நாவல் என்பதால்.

75.
வேனிற்கால வீடு பற்றிய குறிப்புகள்கௌதம சித்தார்த்தன்சிறப்பான அங்கதச் சுவைக்காக.

76.
ராமானுஜர் (நாடகம்) – இந்திரா பார்த்தசாரதிமிகவும் அழகான படைப்பு.

77.
ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) ராமகிருஷ்ணமடம் வெளியீடுநேர்த்தியான மொழிக்காக.

78.
பாரதியார் வரலாறுசீனி. விசுவநாதன்நேர்மையாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

79.
பொன்னியின் புதல்வர்சுந்தாகல்கியின் எழுத்திலிருந்தே பெரும்பாலும் தொகுக்கப்பட்ட அவரது வாழ்க்கை. செய்நேர்த்திக்காக மிகவும் பிடிக்கும்.

80.
சிறகுகள் முறியும்அம்பைபெரும்பாலும் நல்ல சிறுகதைகள் என்பதால்.

81.
அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும்.வே.சிவகுமார்எல்லாமே நல்ல சிறுகதைகள் என்பதால்.

82.
தேர்இரா. முருகன்மொழியின் சகல சாத்தியங்களையும் ஆயுதம் போல் பயன்படுத்தி உள்ளத்தை ஊடுருவும் சிறுகதைகள் என்பதால்.

83.
ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்புஒரு காலகட்டத்தில் தமிழ் வார இதழ்கள் எத்தனை மேலான படைப்புகளை வெளியிட்டன என்று சுட்டிக்காட்டுவதால்.

84.
இந்திய சரித்திரக் களஞ்சியம் (பல பாகங்கள்) – . சிவனடிவிரிவான, முழுமையான இந்திய வரலாறைச் சொல்லுவதால்.

85.
பண்டைக்கால இந்தியா.கே. டாங்கேஅபூர்வமான பல தகவல்களுக்காக.

86.
ஆதவன் சிறுகதைகள் (.பா. தொகுத்தது) – ஆதவனின் மறைவு குறித்து வருந்தச் செய்யும் கதைகள் என்பதால்.

87. 406
சதுர அடிகள்அழகிய சிங்கர்சொற்சிக்கனத்துக்காக.

88.
பட்டாம்பூச்சி (ரா.கி.ரங்கராஜன்) – ஹென்றி ஷாரியர்அசாத்தியமான மொழிபெயர்ப்புக்காக.

89.
சுபமங்களா நேர்காணல்கள்தொகுப்பு: இளையபாரதிமிக அபூர்வமான நூல் என்பதால்.

90.
பாரதி புதையல் பெருந்திரட்டுரா..பத்மநாபன்

91. Made in Japan –
அகியோ மொரிடா

92. Worshiping False Gods –
அருண்ஷோரிஅம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தே அவரது இரட்டை நிலைபாடுகளை எடுத்துக்காட்டும் சாமர்த்தியத்துக்காக.

93.
விவேகாநந்தரின் ஞானதீபம் தொகுதிகள்வேதாந்தத்தை எளிமையாக விளக்குவதனால்.

94.
தேசப்பிரிவினையின் சோக வரலாறுஎச்.வி. சேஷாத்ரிசிறப்பான சரித்திர நூல்.

95.
காந்திலூயி ஃபிஷர்நேர்த்தியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு என்பதால்.

96.
பாரதியார் கட்டுரைகள்மொழி அழகுக்காக.

97.
கோவேறுக் கழுதைகள்இமையம்அழகுணர்ச்சியுடன் எழுதப்பட்ட தலித் நாவல் என்பதனால்.

98.
எட்டுத்திக்கிலிருந்தும் ஏழு கதைகள்தொகுப்பு: திலகவதிநோபல் பரிசு பெற்ற சில எழுத்தாளர்களின் படைப்புகளை மோசமாக மொழிபெயர்த்து இருந்தாலும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய விரிவான அறிமுகக்கட்டுரைகளைக் கொண்டிருப்பதற்காக.

99.
வைரமுத்து கவிதைகள் முழுத்தொகுதிசுகமான சந்தக்கவிதைகள் பலவற்றைக் கொண்டிருப்பதனால்.

100.
நானும் இந்த நூற்றாண்டும்வாலிவிறுவிறுப்பும் சுவாரசியமும் ஏராளமான தகவல்களும் உள்ள தன் வரலாற்று நூல் என்பதனால்.

Comments

Popular posts from this blog

Pulp Fiction - Fan Theory

ON Tamil Writer Sujatha - எழுத்தாளர் சுஜாதா

#home Malayalam movie review