ON EGO - சண்டை கோழை (Tamil poem by Rajesh)
உள்ளே வருவது எதுவாயினும் உள்ளம் அனுமதி கொடுப்பதிலை , அறிவு சண்டையிட்டு வெளி ஏற்றுகிறது . அது , மனிதனாக இருக்கலாம் , கருத்தாக இருக்கலாம் , எதுவாயினும் அனுமதியை தடை செய்கிறது அறிவு .. ஏனன்றால் வருவது அனைத்தும் " தான் " என்ற அகம்பாவத்துடன் , என் " நானை " மதிபிழக்க செய்கிறது . என் பகுத்தறிவை ஜெயிக்க எது வல்லது , இயற்கையா , கவிதையா , குழந்தையா அல்லது பெண்ணா .. பகுத்தலில் மிஞ்கவது உண்மை மட்டுமே , ஆதலால் உண்மை எனக்கு எதிலும் மிஞ்சவில்லை உண்மை எதிலும் இல்லையா அல்லது நான் கரார் பேர்வழியா .. அறிவு உள்ளத்தின் சம்மதத்துடன் உண்மையை தேடுகிறது , உள்ளமோ நானை தேடுகிறது .